business

img

இந்தியாவின் ஏற்றுமதி 17% சரிவு!

இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில் 17 சதவிகிதம் சரிந்துள்ளது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 16.65% சரிந்து 29.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 26.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் இறக்குமதி 56.69 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 
ஏற்றுமதியில் சரிந்து, இறக்குமதி உயரும் நிலையில், வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும். இது ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுதும் என்பது குறிப்பிடத்தக்கது.